திருவண்ணாமலை நடைபயணம் சென்ற சிவனடியார்களுக்கு செஞ்சியில் வரவேற்பு
ADDED :1184 days ago
செஞ்சி: செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு நடைபயணம் சென்ற சிவனடியார்களுக்கு செஞ்சியில் இந்து அமைப்பினர் வரவேற்பளித்தனர்.
திண்டிவனம் அடுத்த வெங்கந்துார் சிவனடியார்கள் குழுவினர் தலைமையில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள் 11 வது ஆண்டாக நேற்று திண்டிவனத்தில் இருந்து 300 பேர் திருவண்ணாமலைக்கு நடைபயணம் சென்றனர். செஞ்சிக்கு வந்த சிவனடியார்களை பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், நகர செயலாளர் கார்த்தி, பா.ஜ., நகர பொது செயலாளர் கடம்பன், சந்திரசேகர், சரவணன், அமலநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். சிவனடியார்களுக்கு செஞ்சியில் காலை உணவும், சத்தியமங்கலத்தில் மதிய உணவும் வழங்கினர்.