ஆற்றல் தரும் அரிய மந்திரம்
ADDED :1110 days ago
ஓம் என்பது பிரணவ மந்திரம். பிரபஞ்சத்தை இயக்கும் அருட்சக்தியின் ஒலி வடிவமே இந்த மந்திரம். கடல் அலையும், சங்கும் இந்த மந்திரத்தை இயற்கையாகவே வெளிப்படுத்துகின்றன. அம்பிகையின் பெயர்களில் உயர்வானது உமா. இதற்கு சக்தி பிரணவம் என்று பெயர். அ, உ, ம என்னும் எழுத்துக்களின் சேர்க்கையாக ஓம் இருப்பது போல, உமா என்னும் சக்தி பிரணவத்திலும் இந்த எழுத்துக்கள் உள்ளன. இதனடிப்படையில் அம்பிகைக்குரிய மூலமந்திரமாக இருப்பது ஓம் உமாதேவ்யை நமஹ. விஜயதசமியன்று இதை ஜபித்தால் அரிய செயலையும் எளிதாக முடிக்கும் ஆற்றல் கிடைக்கும்.