உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பிகைக்கு ஐந்தெழுத்து

அம்பிகைக்கு ஐந்தெழுத்து

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் சிவபெருமானை வழிபடுகிறோம். அது போல அம்பிகைக்கு துர்கா என்னும் சொல் ஐந்தெழுத்து மந்திரமாக உள்ளது. த்,உ,(து), ர், க், ஆ(கா) ஆகிய ஐந்து எழுத்துக்களின் சேர்க்கையே துர்கா. இந்த மந்திரத்தை ஜபித்தால் எதிரி தொல்லை நீங்கும். தைரியம் பிறக்கும். துர்கா என்ற சொல்லுக்கு அரண் கோட்டை என்பது பொருள். தன்னை வழிபடுவோருக்கு அரணாக நின்று காக்கும் இவளை துர்கா தேவீம் சரணம் ப்ரபத்யே என வேதம் போற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !