நல்வாழ்வு தருபவள்
ADDED :1164 days ago
துர்கையாகி வீரத்தையும், மகாலட்சுமியாகி செல்வத்தையும், சரஸ்வதியாகி கல்வியையும் தருபவள் பராசக்தி. காஞ்சி மஹாபெரியவர் தன் பக்தர்களுக்கு அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான். அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாட்சியை நமஸ்காரம் செய். நல்வாழ்வு தருவாள் என்பார். பராசக்தியை வழிபட ஏற்ற விஜயதசமி நன்னாளில் அவளை சரணடைவோம்! வேண்டியதை பெறுவோம்!