உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள மலையை சிவனாக பாவித்து வழிபடுவதால், 14 கி.மீ., துார சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். நேற்று புட்டாசி மாத பவர்ணமி திதி அதிகாலை, 4:09மணி முதல், இன்று அதிகாலை, 3:11 வரை இருந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விடுமுறை நாள் என்பதாலும், வெயிலின் தாக்கம் இல்லாததாலும், பக்தர்கள் சிரமமின்றி தொடர்ந்து கிரிவலம் சென்றனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !