காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி பானை காணிக்கை
ADDED :1395 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராமல பெத்த.அங்கையா என்ற பக்தர் கோயிலில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வெள்ளியினால் ஆன பானைகளை இரண்டு கிலோ எடையுள்ள 1,50 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெள்ளி பானைகளை காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் வழங்கினார் .இவர்களுக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்று விநாயகரை தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை கோயில் சார்பில் வழங்கப்பட்டது.