பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா
அன்னூர்: மொண்டிபாளையம் மற்றும் அன்னூரில், நாளை புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது.
மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு திருமஞ்சனமும், இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு, திருப்பூர் சாய் கிருஷ்ணா நூண் கலைக்கூடத்தின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா நடக்கிறது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 5:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையம் பெருமாள் கோவில், குன்னத்தூர் புதூர் பெருமாள் கோவில், பொங்கலூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நாளை அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.