புரட்டாசி சனி: தங்க கவச அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1194 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று 15ம் தேதி புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தஞ்சை திருப்பதி ஆக இக்கோயிலில் உள்ள மூலவரை பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.