அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி விழா
சிறுமுகை அடுத்துள்ள இருப்ப ரத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ்மாத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர தினமான நேற்று கோவில் வளாகத்தில் ரிஷப்ஷேனர் பூஜை புண்ணியாக வசனம் கலச ஆவாஹனம் தொடர்ந்து நட்சத்திர ஹோமம் சுதர்சன ஹோமம் நரசிம்மர் ஹயக்ரீவர் வராகர் லட்சுமி குபேரர் கருடாழ்வார் ஆதிசேஷன் தன்வந்திரி சர்வ தோஷ நிவர்த்தி மற்றும் புருஷ சித்த ஹோமங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் மூலவர் மற்றும் உற்சவருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் இளநீர் மற்றும் வாசனை திரவியங்களான சிறப்பு அபிஷேகம் நடந்தது. மங்கள ஆரத்தி வேத கோஷங்கள் முடிந்து சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தப் பிரசாத விநியோகம் தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை திருக்கோவில் அர்ச்சகரும் நிர்வாகியும் ஆகிய அனந்தாழ்வான் மேகொண்டார்.