செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கம்
ADDED :1152 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் 42ம் ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது.
செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவில் 42ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், முருகப்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமுருகன் தோற்றம் நிகழ்ச்சியும, நேற்று தந்தைக்கு உபதேசம், இன்று தாருகன் வதை, நாளை (28 ம் தேதி).சிங்கமுகம் வதையும், வீரபாகு துாது நிகழ்ச்சியும், 29ம் தேதி வேல் வங்குதலும், 30ம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும், 31ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.