உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா

திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா

கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலைக்கேணி சுப்ரமணியசாமி கோவிலில் கடந்த அக்.25 கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து முருகப்பெருமான் சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்காட்சி, அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளால் என கோவிலில் தினசரி அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அன்னை ஆதிபராசக்தியிடம் முருகப்பெருமான் சூரசம்காரம் செய்ய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு 108 லிட்டர் பால் மற்றும் 16 வகையான அபிஷேகம், மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறக்காவலர் அழகு லிங்கம், செயல் அலுவலர் சுகன்யா மற்றும் சதாசிவ சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !