உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயன திருக்கோலத்தில் கேதார கவுரி அம்மன்

சயன திருக்கோலத்தில் கேதார கவுரி அம்மன்

பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயில் நோன்பு விழாவில், நேற்று முன்தினம் இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 5 நாட்கள் நோன்பு விழா நடந்தது. தொடர்ந்து நேற்று முன் தினம் காலை உற்சவ சாந்தி, பாலாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மன் சயன திருக்கோலத்தில் முத்துப் பல்லக்கில் வீதி வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !