இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED :1234 days ago
மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதுக்கு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு ஆறாம் நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். சூரசம்ஹார பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.