உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆராட்டு விழா : பக்தர்கள் குவிந்தனர்

மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆராட்டு விழா : பக்தர்கள் குவிந்தனர்

அஞ்சுகிராமம்: மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மடத்தில் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.


கந்தசஷ்டி விழாவில் நிறைவு நாளான நேற்று பிற்பகல் 3 மணிக்கு மருங்கூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து வெள்ளி குதிரையில் மயிலாடி ஆராட்டு விழாவிற்கு எழுந்தருளினார். சூரனை வதம் செய்து கோபத்தில் இருக்கும் சுவாமி கோபம் தணிய தீர்த்தவாரி மடத்தில் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று ஆற்றில் இறங்கி ஆராட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆராட்டு முடிந்து சர்வ அலங்காரத்துடன் வெள்ளி குதிரையில் மயிலாடி வீதிகள் வழியாக மக்களுக்கு ஆசி வழங்கி, மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு சென்றார். வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தனர். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், அரசு வழக்கறிஞர் மதியழகன், மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அம்புரோஸ், பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி துணை தலைவர் சாய்ராம், கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வக்குமார், தலைவர் பாலகிருஷ்ணன் ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !