வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை மற்றும் அன்னதானம்
ADDED :1443 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் 4 கால ஆரத்தி பூஜை, தேர் பவனி மற்றும் அன்னதானம் நடந்தது.
வடகாட்டுப்பட்டியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பாலபிஷேகம் செய்து வஞ்சாமரம் வீசி பூஜை செய்தனர். மதியம் நெய் தீபம் படைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோவிலில் இருந்து பக்தர்கள் இழுத்துச் செல்ல தேர்பவனி நடந்தது. காலை 10 மணி முதல் மாலை வரை கோவிலில் அன்னதானம் நடந்தது. இரவு ஆரத்தி பூஜை நடந்தது இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.