கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் லட்டு விற்பனை தொடக்கம்
ADDED :1071 days ago
நாகர்கோவில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி கோயிலில் லட்டு விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இங்கு கோயில் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நேற்று திருப்பதியில் இருந்து மூவாயிரம் விற்பனை லட்டுகளும், ஆயிரம் இலவச லட்டுகளும் வந்தது. முதல் விற்பனையை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் ஆலோசனை மைய அறங்காவலர்கள் மோகன்ராவ், ராஜேந்திரகுமார், யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு லட்டு விலை 50 ரூபாய் ஆகும். அது போல முதன் முறையாக இங்கு பவித்ர உற்சவ தொடங்கியுள்ளது. இந்த திருவிழா நாளைவரை நடக்கிறது.