அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோச வழிபாடு
ADDED :1066 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மூலவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களில் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அலங்காரமும், தீபாரதனையும் நடைபெற்றது. மேலும் உற்சவ மூர்த்தியான பிரதோஷ நாயகருக்கும், அம்பாளுக்கும் 16 வகையான திரவியங்களில் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் அதனைத் தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது. சனி பிரதோஷ வளர்பிறை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.