உளுந்தாண்டார் கோவில் தேர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் நிதி!
ADDED :4794 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் உடனுரை லோகம்பிகை கோவில் தேர் புதுப்பிக்க குமரகுரு எம்.எல்.ஏ., தனது இரண்டு மாத ஊதியமான 1 லட்சம் ரூபாயை வழங்கினார்.உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் உடனுரை லோகம்பிகை கோவில் பல்லவர் ஆட்சி காலத்தில் மல்லாடர்கோமான் பல்லவனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அகத்திய முனிவர் வழி பட்ட பெருமை உண்டு. பழுதடைந்த இக்கோவில் தேரை புதுப்பிக்க 35 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குமரகுரு எம்.எல்.ஏ., தனது 2 மாத ஊதியமான ஒரு லட்சம் வழங்கினார்.திருச்சியைச் சேர்ந்த சின்னராசு ஸ்தபதி தலைமையில் தேர் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.