குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாலாலயம்
ADDED :1160 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் செய்தனர். விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார தெய்வங்கள், கொடிமரம் அனைத்திற்கும் கலை இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.