ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் பகவத் கீதை சொற்பொழிவு
ADDED :1160 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அக்ரஹாரம் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் இன்று (நவ.14) முதல் பகவத் கீதை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த சொற்பொழிவை மந்த்ராலய வாமன தீர்த்த சுவாமிகள் நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை முக்கிய பிராண ஆஞ்சநேயர் கோயில் பூசாரி கோபிநாதன், ருக் வேத பாடசாலை சுதர்சன ஆச்சாரியார் செய்துள்ளனர். சொற்பொழிவு நாட்களில் ராகவேந்திர பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜைகளும் நடக்க உள்ளதாக கோபிநாதன் தெரிவித்தார்.