உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிகார தெய்வங்களாக விநாயகர், முருகன், கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !