மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
1027 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
1027 days ago
அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
1027 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வெள்ளக் கிணறுவில் உள்ள பழமையான கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இங்குள்ள கன்னிமார் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு, கன்னிமாருக்கு கருவறை அதைச் சுற்றி விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கும்பாபிஷேக விழா, மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு, புனித நீர் வழிபாடு, வேள்வி, பேரொளி, நவமணி இருத்தல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாரி, கன்னிமார் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி, வேள்வி சாலை வழிபாடுகள், இரண்டாம் கால வேள்வி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், திருக்குடங்கள் வேள்வி சாலையில் எழுந்தருளுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி திருமஞ்சனம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு, திருநீறு வழங்குதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
1027 days ago
1027 days ago
1027 days ago