கலைக்குழுவினர் நடனமாடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்
ADDED :1092 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நடனமாடியபடி தெலுங்கானா கலைக்குழுவினர் கிரிவலம் சென்றனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, பாவனாலயா கலைக்குழுவை சேர்ந்த மாணவியர், யாதகிரி ஆச்சாரி தலைமையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தனர். இவர்கள், நடனமாடியபடி கிரிவலம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று, கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து கிரிவலத்தை தொடங்கினர். மொத்தம், 14 கி.மீ., கிரிவலப்பாதை துாரத்தை நடனம் ஆடியபடியே வலம் வந்தனர். இது உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். நடனம் ஆடியபடியே வலம் வந்த, தெலுங்கானா நடன கலைஞர்களை, மக்கள் வியப்புடன் பார்த்தனர்.