ஐப்பசி கடை முழுக்கு சுவாமிகள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி
ADDED :1092 days ago
தேவகோட்டை: ஐப்பசி மாதம் முதல் தேதியும், கடைசி தேதியும் தேவகோட்டை பகுதியில் உள்ள கோவில் சுவாமிகள் எல்லையில் உள்ள மணிமுத்தாறில் தீர்த்தவாரி கொடுப்பது வழக்கம். ஐப்பசி துலா மாத கடைசி நாளான இன்று கடை முழுக்கு தீர்த்தவாரி என்பதால், தேவகோட்டை நகரில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்தியகல்யாணி கைலாசநாதர், கோதண்டராமர், ரங்கநாத பெருமாள், கிருஷ்ணர், கைலாச விநாயகர், நயினார்வயல் கிராமத்தைச் சேர்ந்த அகத்தீஸ்வரர் சுவாமிகள் மணிமுத்தாறு எழுந்தருளினர். சுவாமிகளின் அக்சரத்தேவர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. பூஜை யில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.