உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தியில் ரத சங்கமம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கல்பாத்தியில் ரத சங்கமம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா ரத சங்கமம் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

கேரளா பாலக்காடு கல்பத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் நான்கு வீதிகளிலும் பவனி வந்தனர். இரண்டாவது நாள் மந்தக்கரை மகா கணபதி கோவில் உற்சவர் திருத்தேரில் அக்ஹார வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நேற்று காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும், சாத்தபுரம் பிரசன்னா மகா கணபதி கோவிலிலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ரத உற்சவம் நடந்தது. நேற்று மாலை, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர், சாத்தப்படும் பிரசன்னா மகா கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமையல விஸ்வநாதர் கோவில் தேர்கள் தேர்முட்டியில் சங்கமித்தன. வண்ண விளக்கொளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம், அங்குத் திரண்டிருந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கும் உபதேவ-தேவதைகளுக்கும் நடந்த சிறப்பு பூஜைகளுடன், திருத்தேர் உற்சவம் நிறைமடைந்தது. உற்சவத்தையொட்டி மாவட்ட எஸ்.பி., விஸ்வநாதன் மற்றும் எ.எஸ்.பி., ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !