காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் அப்போலோ குரூப்ஸ் தலைவர் தரிசனம்
ADDED :1249 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐயால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் அப்போலோ (ஹாஸ்பிடல்) குரூப்ஸ் (சேர்மன்) தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணை முதல்வர் ப்ரியதா ரெட்டி மற்றும் குடும்பத்தார் காணிப்பாக்கம் விநாயகரை தரிசனம் செய்தனர். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயக பெருமானை தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் வழங்கினர்.