உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலுார் அருகே பாலாற்றில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு

வேலுார் அருகே பாலாற்றில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு

வேலுார்: வேலுார் அருகே, பாலாற்றில் மணல் அள்ளும் போது சிவலிங்கம் சிலை, துாண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வேலுார் அருகே, பெருமுகை பகுதியில் உள்ள பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் இருந்து மணல் அள்ளி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை,  10 அடி ஆழத்தில் மணல் அள்ளும் போது, கல்லால் ஆன சிவலிங்கம் ஒன்று, கோவில் துாண்கள் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள பாலாற்றின் கரையோரம் சிவன் கோவில் இருந்ததும், ஆற்று வெள்ளத்தில் கோவில் மூழ்கி இருக்கலாம் என வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. வேலுார் அரசு அருங்காட்சியக அதிகாரிகள் சிவலிங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !