உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் முருத்யுஞ்ஜய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் முருத்யுஞ்ஜய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள முருத்யுஞ்ஜய சுவாமிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ம்தேதி காலை சுவாமிக்கு பல்வேறு சுகந்த திரவியங்கள் ஆன பால், பஞ்சாமிர்தம், சந்தனம் ,விபூதி, பச்சைக் கற்பூரம் போன்றவற்றால் முருத்யுஞ்ஜய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோயில் வேதப் பண்டிதர்களால் நடத்தப்பட்டது .இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்ததோடு நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து மகா மங்கள ஆரத்திகளை சமர்ப்பித்தனர்.  இந்த அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !