/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா: தங்க சூரியபிரபை வாகனத்தில் சுவாமி உலா
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா: தங்க சூரியபிரபை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1396 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் இரண்டாம் நாள் காலை உற்சவத்தில், பச்சைக்கல் வைரகிரீடம் அணிந்து தங்க சூரியபிரபை வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூஷிக வாகனத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.