பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் சோமவார வழிபாடு
ADDED :1053 days ago
மதுரை : மதுரை பழங்காநத்தம் காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு, மூலவர் காசி விஸ்வநாதர் பெருமானுக்கு சகல அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது இறுதியாக 108 சங்குகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு அந்த சங்குகளில் புனித நீர் எடுத்து காசி விஸ்வநாதர் பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்களும் மெய்யன்பர்களும் கலந்து கொண்டு இறை தரிசனமும் குரு தரிசனமும் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.