உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி செந்தில் ஆண்டவர் கோயிலில் சம்பக சஷ்டி விழா

பரமக்குடி செந்தில் ஆண்டவர் கோயிலில் சம்பக சஷ்டி விழா

பரமக்குடி: பரமக்குடி செந்தில் ஆண்டவர் கோயிலில் அருள் பாலிக்கும் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடக்கிறது.

இக்கோயிலில் விழாவானது நவ., 23 ல் துவங்கிய நிலையில் 30 வரை நடக்க உள்ளது. தினமும் மாலை சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து, வெள்ளை, பச்சை, சிகப்பு, வெண்ணெய் சாற்றி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

*பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சொர்ண ஆகர்சன பைரவருக்கு நேற்று இரவு சம்பகஷ்டி விழா நடந்தது. மாலை சிறப்பு ஹோமங்கள் நடந்து, பூர்ணாகுதிக்கு பின் பல்வேறு வகையான அபிஷேகம் நடத்தப்பட்டன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

*பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் 20 ம் ஆண்டு சம்பகஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை ஹோமம், விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பைரவர் வெண்ணெய் காப்பு அலங்காரமும், சகஸ்ர நாம அர்ச்சனை நிறைவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !