சோமலிங்கசுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :1368 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்க சுவாமிக்கு, 16 திரவிய அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. 108 சங்குகளில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டது. மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.