அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா கால பைரவாஸ்டமி பூஜை
ADDED :1041 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா கால ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி பூஜை நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஜென்மாஷ்டமி முன்னிட்டு மஹா கால பைரவாஷ்டமி பூஜையில் இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம்,பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களில் மஹா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உபச்சார வழிபாடும் உள் பிரகார உலாவும் நடந்தது. மேலும் உற்சவருக்கு மகாதீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மஹா கால ஜென்மாஷ்டமி கால பைரவர் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் செய்திருந்தார் .இதில் சிவக்குமார், தியாகராஜ சிவம், ஜெயக்குமார் விஜயகுமார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர்.