ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா
ADDED :1035 days ago
போடி : போடி அருகே நாகலாபுரத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்வில் விளக்கு பூஜை, யாக பூஜை, சுவாமி நகர்வலம் நடந்தன. விழாவை காண்பதற்காக சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் பங்கேற்று சுவாமி ஐயப்பன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.