காளஹஸ்தீஸ்வரரை வழிபட்ட அமெரிக்கா, கனடா, ரஷ்யா பக்தர்கள்
ADDED :1393 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் வெங்கடகிரி அடுத்துள்ள பெஞ்சுல கோனா (மலை )கருணாமய ஆசிரம நிறுவனர் ஸ்ரீ விஜயேஸ்வரி தேவி இன்று செவ்வாய்க்கிழமை காலை ஞானபிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமியை அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .இவர்களுக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலூ சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ விஜயஸ்வரி தேவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.