வரசித்தி விநாயகர் கோயிலுக்கு தங்க பட்டை காணிக்கை
ADDED :1395 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அஜய்குமார் குடும்பத்தினர் விநாயகப் பெருமானுக்கு (மூலவருக்கு ) தங்கத்தால் செய்யப்பட்ட சந்தனப் பொட்டு வடிவில் கற்களுடன் 45 கிராம் எடையுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளதை காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் வழங்கினர் இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.