உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு கோயிலிலில் ஆவணி திருவிழா: சுமங்கலி பூஜை

மண்டைக்காடு கோயிலிலில் ஆவணி திருவிழா: சுமங்கலி பூஜை

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆவணி திருவிழா இன்று துவங்குகிறது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா இன்று துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு மகா சுமங்கலி பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் 500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்கின்றனர். இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு சிங்காரிமேளம், 11 மணிக்கு ஆவணி அஸ்வதி பொங்காலை, பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு பஜனை, மூன்றாம் நாள் காலை 5.30 மணிக்கு தீபாராதனை, மதியம் ஒரு மணிக்கு உச்ச பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு கோயிலில் ஆன்மிக கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும், மண்டைக்காடு தேவஸ்தான பள்ளியில் 10, 12ம் வகுப்புகளில் அதிக மார்க்க பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்வம் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !