காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1330 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ரமணா இன்று குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் துணை ஆணையாளர் மல்லிகா ஜூன் பிரசாத் மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ரமணாவை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.