மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி சிவன் ரதம் வருகை
ADDED :1010 days ago
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி சிவன் ரதம் நேற்று வருகைப்புரிந்தது. காரைக்கால் மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய குளக்கரைக்கு நேற்று கேவையிலிருந்து ஆதியோகி சிவன் ரதம் வருகைப்புரிந்தது. வருகைப்புரிந்த ஆதியோகி சிவன் ரதத்தினை ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தான அறங்காவலர் வாரியம் சார்பில் வரவேற்று சிறப்பு பூஜை செய்தனர்.பின்னர் ரதம் ஊர்வலம் நெடுங்காடு,திருப்பட்டினம்.நிரவி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றது.அப்போது பொதுமக்கள். சிவனடியார்களும் பலர் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.