பழமையான சந்திரமவுலீஸ்வர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4781 days ago
திருவள்ளூர்: சிட்டத்தூரில், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமவுலீஸ்வர் கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் கிராமத்தில், 900 ஆண்டு பழமை வாய்ந்த திருபுரசுந்தரி உடனுறை சந்திரமவுலீஸ்வர் கோவில் உள்ளது. காலபோக்கில், கோவில் பழுதடைந்து, புதர்கள் மண்டி, காடு போல் மாறியது. கோவில் தர்மகர்த்தா டில்லி தலைமையில் சிவபக்தர்கள், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பணி குழு அமைத்து, கோவிலை சீரமைத்தனர். புனரமைக்கப்பட்ட கோவிலுக்கு, நேற்று முன்தினம், காலை, 9 மணியளவில் மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமம் சங்கரானந்த சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடந்தது.