உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா நிக்கேதனையில் முற்றோதல்

ஞானானந்தா நிக்கேதனையில் முற்றோதல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம், ஸ்ரீ ஞானானந்தா நிகேதனையில் முற்றோதல் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனையில், சத்சங்க மண்டபத்தில் முற்றோதல் விழா காலை 9:00 மணிக்கு துவங்கியது. ரிஷபரூடராக சிவபெருமான், அம்பாள், முருகன், சுவாமிகளுடன் அப்பர், சுந்தரர் உள்ளிட்ட நாள்வர் ஆவாகனம் செய்யப்பட்டு, திருச்சி சிவனடியார்கள் குழு சார்பில் முற்றோதல் துவங்கியது. நித்தியானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். மதுரை சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள், ராமானந்தகிரி சுவாமிகள், அமிர்தேஸ்வரானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். காலை துவங்கிய முற்றோதல் மாலை 5:00 மணி வரை நடந்தது. அறக்கட்டளை அறங்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுவாமிநாதன், பரமேஸ்வரன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !