உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் நடந்தது.

முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்காக புதிய தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்ட பெருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. 21ம் தேதி ரத பிரதிஷ்டை, யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் யாக பூஜைகளை தொடர்ந்து தேருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை அதிவாச ேஹாமம், பூர்ணாஹூதியை தொடர்ந்து 9 மணிக்கு கும்பம் புறப்பாடாகி 9.15 மணிக்கு மகா கும்ப ப்ரோஷணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் துவங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் உபயதாரகள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !