பட்டைபெருமாள் கோவிலில் வரும் 8ல் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :4779 days ago
ராசிபுரம்: ராசிபுரம்- ஆத்தூர் சாலை, பட்டை பெருமாள் கோவிலில் வரும், 8ம் தேதி, கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு, சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 9 மணிக்கு, வழக்காடு மன்றம் நடக்கிறது. ஈரோடு நாகசரஸ்வதி தலைமையில், புலவர் ராமகண்ணன் மற்றும் காந்திமதி ஆகியோர் பேசுகின்றனர். பகல், 12 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்கின்றனர்.