உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கமுதி வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கமுதி: கமுதி வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம்,முதல் யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. பின்பு இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பிறகு குருக்கள் விஸ்வநாதன் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. வீரமாகாளி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோன்று கமுதி அருகே சின்னஆனையூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கணபதி ஹோமம் தொடங்கி,நவகிரக ஹோமம் முதல்,இரண்டாம்,மூன்றாம்,நான்காம் கால யாகசாலை,விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பிறகு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் முதுகுளத்தூர், கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !