வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் சிறப்பு ஆரத்தி பூஜை
ADDED :1234 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை மற்றும் அன்னதானம் மாலை வரை நடந்தது.மாலை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய புத்தாடை அணிவித்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆரத்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவை பல்லக்கில் தூக்கிச் செல்ல பல்லக்குபவனி நடந்தது. இரவு 10 மணிக்கு நிறைவு ஆரத்தி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.