உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு கோவில்களில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

இரண்டு கோவில்களில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

செஞ்சி: சத்தியமங்கலம் முருகன், சிவன் கோவில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். செஞ்சியை அடுத்த சத்தியமங்கலத்தில் செஞ்சி–திருவண்ணாமலை மெயின் ரோட்டில் முருகன், சிவன் கோவில்கள் தனித்தனியே உள்ளன. இந்த இரண்டு கோவில்களிலும் இருந்த உண்டியல்களை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளனர். முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு உண்டியலை திறந்து பணத்தை நிர்வாகத்தினர் எடுத்திருந்தனர். இதில் குறைந்த அளவே பணம் இருந்தது. சிவன் கோவில் உண்டியலிலும் குறைந்த அளவிலேயே பணம் இருந்ததுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சுதா, சப் இன்ஸ்பெக்டர் குமரேசன், தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். கைரோதை சப் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் கைரோகைகளை பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !