உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோயிலில் பால்குட திருவிழா

சித்தி விநாயகர் கோயிலில் பால்குட திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி சித்தி விநாயகர் கோயில் பால்குட திருவிழா நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கிராம மக்கள், பக்தர்கள் ஊர் மந்தையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இரவு வெள்ளிவேல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், வள்ளல் பாரி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !