படித்துறை வரத விநாயகருக்கு 21 வகை அபிஷேக ஆராதனை
ADDED :1070 days ago
சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வட்டபிள்ளையார் கோவில் அருகே மலையாளம் கிருஷ்ணய்யர் சாரிடபில் டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள படித்துறை வரத விநாயகருக்கு 21 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அர்ச்சகர் கார்த்திக் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். விவேகானந்த கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோயிலில் அர்ச்சகர் தலைமையில் கணபதி துதி பாடி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.