உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அப்பாடி! விட்டாரு அஷ்டமச்சனி!

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அப்பாடி! விட்டாரு அஷ்டமச்சனி!

புரட்டாசி: பிறர்நலம் கருதி செயல்படும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் அஷ்டமச்சனி நிலையில் இருந்து உங்களுக்கு விடுதலை தந்து ஒன்பதாம் இடத்திற்கு சென்று விட்டார். ஆனாலும், சந்திரனைத்தவிர மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தருகிற இடங்களில் உள்ளனர். நல்ல சிந்தனை, நியாயமான செயல்களைப் பின்பற்றுவதால் மட்டுமே சிரமங்களைப் பெருமளவில் குறைக்கலாம். பேச்சில் நிதானம், செயலில் பொறுப்புணர்வு அவசியம். வீட்டிற்குத் தகுந்த பாதுகாப்பு, வாகன பயணத்தில் மிதவேக நடைமுறை வேண்டும். புத்திரர்கள் கவனக்குறைவால் உடல்நல பாதிப்பு அடையலாம். கவனம். பணவரவு சுமாராக இருக்கும். தம்பதியர் குடும்பநலன் கருதி விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவது அவசியம்.  தொழிலதிபர்கள் உற்பத்தியை சீராக்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வர்.  வியாபாரிகள் சந்தையில் புதிய போட்டிகளை சந்திப்பர். அளவான விற்பனை, அதற்கேற்ப லாபம் உண்டு. பணியாளர்கள் சக பணியாளர்களின் அதிருப்திக்கு உட்படாதவகையில் நடந்துகொள்வது நல்லது.  குடும்பத்தேவையை நிறைவேற்ற அதிக கடன் வாங்கக்கூடாது. குடும்பப் பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வரலாம். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பொறுப்புடன் பின்பற்றுவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் சரக்குகளைப் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டும். அபிவிருத்தி பணிகளை அடுத்து வரும் மாதங்களில் மேற்கொள்ளலாம். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் இருதரப்பு நியாயங்களையும் கவனத்தில் கொள்வதால் பகைமை வராமல் தவிர்க்கலாம். விவசாயிகள் அனுபவம் இல்லாத பயிர் வகைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டாம். மாணவர்கள் ஒவ்வொரு செயலையும் முன்யோசனையுடன் செய்வது மட்டுமே தேர்ச்சி விகிதம் உயர உதவும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவதால் கிரகங்களால் வரும் சிரமபலன் குறையும்.
உஷார் நாள்: 17.9.12 காலை 6-18.9.12 பிற்பகல் 1.38 மற்றும் 13.10.12 மாலை 5.43-15.10.12 இரவு 9.36.
வெற்றி நாள்: செப்டம்பர் 22, 24
நிறம்: வெள்ளை, நீலம்      எண்: 6, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !