சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :972 days ago
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், பாரிவேட்டை தெப்ப உற்சவம் நடந்தது. காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா கடந்த, 5, 6, 7 தேதிகளில் நடந்தது. இந்நிலையில் கோவில் அடிவாரத்தில், நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில், பாரிவேட்டை தெப்ப உற்சவம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமி பாரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளினார். தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து, தெப்ப உற்சவம் நடந்தது. பின் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுப்பிரமணியர் திரும்பினார். வரும், 14ம் தேதி மாலை சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடர்நது, 5:00 மணிக்கு மலைக் கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்தலுடன், தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.